கோட்டைக்குச் சென்ற சாமியே.. 'கருப்பு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காகத் தயாரிப்பாளரை நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்!
நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் வெறும் 5 நாட்களில் ₹160 கோடிக்கும் மேல் வசூலித்து விஸ்வரூபம் எடுத்துள்ள 'கருப்பு' திரைப்படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் படம் அசுர வேட்டையாடி வரும் சூழலில், கோட்டையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மற்றும் முதலமைச்சரின் வாழ்த்துப் பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
TFAPA நிர்வாகிகளுடன் நேரில் சந்திப்பு: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) நிர்வாகிகள் மற்றும் 'கருப்பு' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு (Dream Warrior Pictures) ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்தனர். இந்த பிரதிநிதிகள் குழுவில் சங்கத்தின் தலைவர் டி.ஜி. தியாகராஜன், பொதுச்செயலாளர் டி. சிவா, பொருளாளர் ஜி. தனஞ்செயன், துணைத் தலைவர்கள் எஸ்.ஆர். பிரபு, எஸ்.எஸ். லலித் குமார் மற்றும் இணைச் செயலாளர்கள் முகேஷ் ஆர். மேத்தா, எஸ். வினோத் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (Chief Minister's Public Relief Fund) ₹10 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை (Bank Draft) அவர்கள் வழங்கினர். இந்த நிகழ்வின் போது, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவை தனியாகப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் அடைந்து வரும் பிரம்மாண்ட வெற்றிக்காகத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார்.
நெகிழ்ச்சியில் 'கருப்பு' படக்குழு - அதிகாரப்பூர்வ அறிக்கை: முதலமைச்சரின் இந்த வாழ்த்தைத் தொடர்ந்து, 'கருப்பு' படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
"நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், எங்களது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவை நேரில் வாழ்த்தி, 'தி ஒன்' சூர்யாவின் #Karuppu திரைப்படத்தின் இந்த இமாலய வெற்றிக்காகத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். முதலமைச்சர் அவர்களின் இந்த வாழ்த்து எங்களது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த உற்சாகத்தையும், நெகிழ்ச்சியையும் அளித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா, முதலமைச்சரின் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொண்டிருந்த நிலையில், தற்பொழுது இவர்களின் வெற்றிப் படத்திற்கு முதலமைச்சரே நேரடியாக வாழ்த்துத் தெரிவித்திருப்பது சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களிடையே இணையத்தில் #CMVijay மற்றும் #Karuppu ஆகிய ஹாஷ்டேகுகளுடன் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.