TBC News
கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பெண்களின் பாதுகாப்பிற்கு 'மின்னல் வேக' கவசம்: சென்னையில் மே 27-ல் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

Share This Article:

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக காவல் பிரிவான 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' (Singappen Special Task Force - SSTF) திட்டத்தை, வரும் மே 27-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

பெண்களின் பாதுகாப்பிற்கு 'மின்னல் வேக' கவசம்: சென்னையில் மே 27-ல் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

திட்டத்தின் பின்னணியும் முக்கியத்துவமும்:

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பிறப்பித்த முதற்கட்ட அதிரடி உத்தரவுகளில் இந்த "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைப்பதும் ஒன்றாகும்.

சமீபத்தில் கோவையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில், இத்திட்டத்தை உடனடியாக மாநிலத் தலைநகரிலும் முழு வீச்சில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதிரடிப்படையின் கட்டமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்:

  • முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பு: இந்தச் சிறப்பு அதிரடிப்படை பிரிவு முழுவதும் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். இப்படையின் முதல் பெண் ஐ.ஜி-யாக (IG) பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அதிநவீன வசதிகள்: முதற்கட்டமாக ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பிகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட துடிப்பான காவலர்கள் இப்படையில் இணைக்கப்பட்டுள்ளனர். பெண்களின் அவசர அழைப்புகளுக்கு மின்னல் வேகத்தில் சென்று உதவ 30 அதிநவீன ரோந்து வாகனங்கள் (Patrol Vehicles), நவீன பாடி வோர்ன் கேமராக்கள் (Body Worn Cameras) மற்றும் பிரத்யேக லோகோவுடன் கூடிய புதிய சீருடைகள் இப்படையினருக்கு வழங்கப்படவுள்ளன.
  • தீவிர கண்காணிப்புப் பகுதிகள்: பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி-கல்லூரிகள், பூங்காக்கள் மற்றும் ஐடி காரிடார் (IT Corridors) போன்ற பெண்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் இந்த அதிரடிப்படையினர் 24 மணி நேரமும் தீவிர ரோந்து மற்றும் விசிபிள் போலீசிங் (Visible Policing) கண்காணிப்பில் ஈடுபடுவர்.


Content image

சென்னையில் பிரம்மாண்ட தொடக்க விழா:

ஏற்கனவே சேலம் உள்ளிட்ட சில முக்கிய மாநகரங்களில் சோதனை அடிப்படையில் இப்படை தனது பணியைத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் இதன் அதிகாரப்பூர்வ மாநில அளவிலான தொடக்க விழா வரும் மே 27-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று, கொடியசைத்துச் சிங்கப்பெண் அதிரடிப்படை வாகனப் பேரணியைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த அதிரடிப் பிரிவு செயல்பாட்டிற்கு வருவது தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions