TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகம்: நாயகி மற்றும் பட பூஜை விவரங்கள் இதோ!

Share This Article:

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித், ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.

இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகம்: நாயகி மற்றும் பட பூஜை விவரங்கள் இதோ!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பல வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியது. தற்போது இவர் 'வேள்பாரி' படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், ஷங்கரின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசு சினிமாவுக்குள் நுழைந்துள்ளது.

இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருக்க, இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'மாவீரன்' படத்திலும் நடித்து வெற்றி கண்ட அவர், தற்போது தெலுங்கு சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

Content image

இந்த நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்குகிறார். அட்லியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய நபர் ஒருவர் இப்படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் புதிய படத்தில் அர்ஜிட்டுக்கு ஜோடியாக பிரபல இளம் நடிகை கிருத்தி ஷெட்டி (Krithi Shetty) ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் தொடக்க பூஜை சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions