TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பெரியபாளையம் இறால் தொழிற்சாலை அமோனியா கேஸ் கசிவு - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Share This Article:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு (Ammonia Gas) கசிவு விபத்தில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் இச்சம்பவத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பெரியபாளையம் இறால் தொழிற்சாலை அமோனியா கேஸ் கசிவு - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

சிகிச்சை விவரங்கள் குறித்த சுகாதாரத்துறை தகவல்:

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது:

  • சிகிச்சையில் உள்ளவர்கள்: சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மருத்துவமனைகளில் மொத்தம் 67 தொழிலாளர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • வெண்டிலேட்டர் உதவி: இவர்களில் 31 தொழிலாளர்களுக்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், வெண்டிலேட்டர் (Ventilator) உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • டிஸ்சார்ஜ்: அதிர்ஷ்டவசமாக, பாதிப்பிலிருந்து மீண்ட 2 தொழிலாளர்கள் பூரண குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions