வசூலை வாரிக்குவிக்கும் சமந்தாவின் 'எங்கள் தங்கம்'.. 11 நாட்களில் உலகளவில் ரூ.90 கோடி சாதனை!
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படம், வெளியான 11 நாட்களிலேயே உலகளவில் ரூ. 90 கோடி வசூலித்து மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை சமந்தா ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதளத்தில் நடித்து திரைக்கு வந்துள்ள திரைப்படம் 'எங்கள் தங்கம்'. 'ஓ பேபி' புகழ் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தை சமந்தாவே தனது ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார். கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், குடும்ப ரசிகராகர்களை ஈர்த்து பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
வசூல் வேட்டை
சோலோ ஹீரோயினாக சமந்தாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ள இப்படம், முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் விஸ்வரூப வசூலை ஈட்டியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக 11 நாட்களைக் கடந்துள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 90 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பெண்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படமான இது, குறைந்த நாட்களில் இமாலய தொகையை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என சினிமா வர்த்தக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

0 Comments
No comments yet. Be the first to comment.