TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"குதிரை பேரமா? அப்படின்னா என்ன? சிலபஸில் தேடிக்கொண்டிருக்கிறோம்" – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

Share This Article:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "குதிரை பேரம் என்றால் என்ன என்பது புரியவில்லை. அதற்கான விளக்கத்தை சிலபஸில் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

"குதிரை பேரமா? அப்படின்னா என்ன? சிலபஸில் தேடிக்கொண்டிருக்கிறோம்" – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் "குதிரை பேரம்" குறித்த கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதிலை அளித்தார்.

அவர் கூறுகையில், "குதிரை பேரம் என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை. எல்லோரும் 'குதிரை பேரம்' என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் உண்மையான பொருள் என்ன என்பது குறித்து சிலபஸில் தேடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான விளக்கம் கிடைத்தால் நிச்சயமாக பதில் சொல்கிறோம்" என்றார்.

Content image

மேலும், "குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் இந்த ஆட்சிக்கு இல்லை. ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே சட்ட அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார்" என்றும் தெரிவித்தார்.

Content image

அமைச்சர் செங்கோட்டையனின் இந்த நகைச்சுவை கலந்த கருத்து அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக "சிலபஸில் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்ற அவரது பதில் அரசியல் விவாதங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions