TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

விஜய் குற்றவாளி இல்லை... திமுக மனுவை ஏன் நிராகரித்தது? உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த பரபரப்பு!

Share This Article:

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. விசாரணையின்போது, "விஜய் குற்றவாளி அல்ல" என நீதிபதிகள் தெளிவுபடுத்தியதுடன், நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக மாற்ற முடியாது என்றும் கடுமையாகக் கருத்து தெரிவித்தனர்.

விஜய் குற்றவாளி இல்லை... திமுக மனுவை ஏன் நிராகரித்தது? உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த பரபரப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும், திமுக தரப்பின் வாதங்களும் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிகழ்வு சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்று கூறி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Content image

அந்த மனுவில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் ஆனந்த், அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கும் நடவடிக்கைகள் சி.பி.ஐ. அனுமதியுடன் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நிகழ்த்திய பேச்சு, வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய மனுதாரர் தரப்பு, அவர் மீது தனியாக நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

இந்த மனு நீதிபதி கே.வி. விஸ்வநாதன் மற்றும் நீதிபதி அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி, "தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து பொதுவெளியில் கருத்து தெரிவித்து வருவதால், வழக்கின் தன்மை மாறுபட்டதாக ஒரு போலிப் பிம்பம் உருவாக்கப்படுகிறது. இது, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உச்ச நீதிமன்ற உத்தரவின் நோக்கத்தையே பாதிக்கிறது" என்று வாதிட்டார்.

Content image

இதற்கு பதிலளித்த நீதிபதி விஸ்வநாதன், "முதல்வரின் பயணத் திட்டத்தைக் கூட உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? யார் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கம் அளித்த ரஞ்சித் குமார், "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை. ஆனால், வழக்கின் விசாரணை குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதை மட்டுமே தடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் ஏற்காத நீதிபதி விஸ்வநாதன், "அப்படியானால் பேச்சுரிமைக்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? அவர்கள் பேசினால், அதற்கு உங்கள் தரப்பும் பதிலளிக்கலாம். அரசியல் எதிரிகளை உள்ளே இழுத்து உச்ச நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக மாற்ற முடியாது" என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.

விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்குவது எவ்வாறு சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். "இந்த மனு நன்கு சிந்தித்து தாக்கல் செய்யப்பட்டதா?" என்றும் நீதிமன்றம் வினவியது.

இதன் பின்னர், வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தனது வாதத்தில், "முதல்வர் விஜய் இந்த வழக்கில் நிர்வாகத்தின் தலைவராக இருப்பதோடு, முதல் குற்றவாளியாகவும் உள்ளார்" என்று குறிப்பிட்டார்.

Content image

இந்த வாதத்துக்கு உடனடியாக நீதிபதி விஸ்வநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். "எப்.ஐ.ஆர்.-இல் முதல்வர் விஜயின் பெயர் குற்றவாளியாக இடம்பெறவில்லை. யார் முதல் குற்றவாளி? உங்கள் மனுவிலும், வழக்கின் எப்.ஐ.ஆர்.-இலும் விஜய் குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை. தயவுசெய்து உங்கள் தகவல்களை சரிபார்த்து பேசுங்கள். ஒருவேளை நான் தவறாக இருந்தாலும், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்" என்று நீதிபதி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுலும், "முதல்வர் விஜய் இந்த வழக்கில் குற்றவாளி அல்ல" என்று நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

அதன்பிறகு நீதிபதி விஸ்வநாதன், "அமைச்சர்களாக உள்ள சிலரே குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால், முதல்வர் மீது குற்றச்சாட்டு இல்லை. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முடியாது. இந்த மனுவை விசாரிக்க எங்களுக்கு விருப்பமில்லை" என்று தெளிவாக தெரிவித்தார்.

Content image

இதையடுத்து திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார், இந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். மேலும், உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிமன்றம், மனுவை "திரும்பப் பெறப்பட்டதாக" பதிவு செய்து தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், மனுதாரர் சட்டத்தின் கீழ் கிடைக்கும் பிற உரிய வழிமுறைகளை நாடிக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

இந்த விசாரணையில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள், குறிப்பாக "விஜய் இந்த வழக்கில் குற்றவாளி அல்ல" என்ற தெளிவுபடுத்தலும், "நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக மாற்ற முடியாது" என்ற கருத்தும் வழக்கின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. அதேசமயம், மனுவை திரும்பப் பெற்று பிற சட்ட வழிகளை நாட திமுக தரப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions