"மந்திர மே மாதம்!".. 'கருப்பு' படத்தின் மெகா வெற்றியால் உறைந்துபோன த்ரிஷா - இன்ஸ்டாவில் நெகிழ்ச்சிப் பதிவு!
கடந்த வாரம் வெளியாகி தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பி வரும் 'கருப்பு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக மெகா சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் நடிகை த்ரிஷா. 'பொன்னியின் செல்வன்', 'லியோ', 'குட் பேட் அக்லி' என தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வரும் த்ரிஷா, தமிழ் சினிமாவின் எவர்கிரீன் 'கனவுக்கன்னி'யாக வலம் வருகிறார்.
அந்த வரிசையில், அவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
பல ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவுடன் கூட்டணி
இப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே, பல ஆண்டுகளுக்குப் பிறகு முன்னணி நடிகர் சூர்யாவுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருப்பதுதான். இவர்களது ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி திரையரங்குகளில் ரசிகர்களைக் வெகுவாகக் கவர்ந்துள்ளதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்தது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை 'கருப்பு' திரைப்படம் நூறு சதவீதம் பூர்த்தி செய்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக உருவெடுத்துள்ளது.
"மந்திர மே மாதம்!" - இன்ஸ்டாகிராமில் த்ரிஷாவின் மகிழ்ச்சியான பதிவு
திரைப்படம் அடைந்துள்ள இந்த இமாலய வெற்றியைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"My magical May said, one more for the win 🧿 Just God things" (எனது மந்திர மே மாதம் கூறியது, வெற்றிக்கான இன்னொன்று! எல்லாம் கடவுளின் செயல்)
என த்ரிஷா அதில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 'கருப்பு' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில சுவாரசியமான, இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் தனது ரசிகர்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
த்ரிஷா பகிர்ந்துள்ள இந்த கியூட் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர், 'கருப்பு' படத்தின் அசுர வெற்றிக்கும், த்ரிஷாவின் தொடர் சாதனைகளுக்கும் தங்களது வாழ்த்துகளை கமெண்ட் பாக்ஸில் குவித்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.